Header Ads

  • சற்று முன்

    ஒரே அரசு பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகள் சாதனை... மருத்துவக் கல்லுரியில் பயில வாய்ப்பு..

    கல்லணை அரசு பள்ளி மாணவிகள்

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லணை அரசு பள்ளியில் படித்த ஆறு மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது.

    அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் 4,349 இடங்களும் தனியார் கல்லூரிகளில் 2,650 இடங்களும், இளநிலை மருத்துவப் படிப்பில் மொத்தம் 6,999 இடங்கள் உள்ளன. அவற்றில் மாணவர்கள் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. 

    மருத்துவ கலந்தாய்வு

    அதன் அடிப்படையில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லணை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. நெல்லை டவுன் கல்லணை பகுதியைச் சேர்ந்த ஞானலசி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா, ஆகியோருக்கு  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிகளும். காயத்ரி என்ற மாணவிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது. 

    மேலும் படிக்க : பிறந்தநாள் கொண்டாடிய திவ்யபாரதி... இணையத்தில் வைரலாகும் வீடியோ

    அதேபோல சௌந்தர்யா என்ற மாணவிக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளும் கிருத்திகா என்ற மாணவிக்கு கோவை தனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடம் முதல் கட்ட கலந்தாய்வில் கிடைத்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டம் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரே பள்ளியில் படித்த ஆறு மாணவிகளுக்கு முதல் கலந்தாய்வு நாளிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நிர்வாக தரப்பில் தெரிவித்துள்ளனர். அதோடு ஒரு மாணவிக்கு கோவை பல் மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    7 மாணவிகள் சாதனை

    மேலும் இன்று நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் இதே பள்ளியைச் சார்ந்த மாணவிகள் பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அப்பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் மொத்தம் ஆறு மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் படித்து மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு பெற்ற நிலையில். முதல் நாள் கலந்தாய்வில் ஒரே பள்ளியில் 6 முதல் 12 வரை பயின்ற 7 மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கலந்தாய்வில் இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    1 comment:

    1. yaya reddit casino【WG98.VIP】play the russian
      best russian casino【WG98.VIP】play the russian roulette,vegas slots free games no download no registration no login 메리트카지노총판 no 【WG98.VIP】play the russian roulette,wagering

      ReplyDelete

    Post Top Ad

    Post Bottom Ad