Header Ads

  • சற்று முன்

    நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடிகள்...என்கவுன்டர் செய்த போலீஸ் : பின்னணி என்ன??

    ரவுடிகள் என்கவுன்டர்

    செங்கல்பட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகளை போலீசார் என்கவுன்டர் செய்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் அருகே உள்ள  டீக்கடை ஒன்றில் அப்பு, கார்த்திக் என்பவர்கள் இருவரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த 3 கும்பல் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அவர்களை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

    இதனையடுத்து மேலும் அந்த கும்பல் மகேஷ் குமார் என்பவரின் வீட்டிற்கு சென்று அங்கு அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இவ்வாறு அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

    இதனையடுத்து போலீசார் இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர்.  இந்நிலையில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையதாக மாதவன், ஜெசிகா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  

    இதையும் படுயுங்கள் ; 11 நாட்கள் வாழ்ந்துவிட்டு.. 11 ஆண்டுகள் பிரிந்திருந்த தம்பதி.. மனைவி கூறிய காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி..

    மேலும் போலீசாருக்கு தீனா, மொய்தீன் ஆகிய இருவரும் காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை  அடுத்து போலீசார் காட்டுப் பகுதிக்கு  விரைந்து சென்றனர். அங்கு தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் மீது  குற்றவாளிகளான தீனா, மொய்தீன் நாட்டு வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்று உள்ளனர். இதனால் போலீசார் அவர்கள் இருவரையும்  என்கவுண்டர் செய்தனர் இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad