Header Ads

  • சற்று முன்

    ’’நீண்ட நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்த ராஜேந்திர பாலாஜி கைது’’.. கர்நாடகாவில் வைத்து வளைத்துப் பிடித்த போலீஸ்.

    ராஜேந்திர பாலாஜி கைது

    ஆவின் உள்ளிட்ட  பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 3 கோடி பணம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இந்த புகார் குறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவின் பேரில் போலீசார்  விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார் அந்த மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் தலைமறைவானார் அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர்.

    ராஜேந்திர பாலாஜி கைது

    இந்நிலையில் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனது வழக்கறிஞர் மூலம்  அவர் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும்  முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.  இதற்கு,  தமிழக அரசு தங்களிடம் கருத்து கேட்காமல்  ராஜேந்திர பாலாஜிக்கு  ஜாமீன் வழங்கக்கூடாது  என அவருக்கு எதிராக கேவியட் மனு தாக்கல் செய்தது. விமானம் மூலம் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுக்கு  தப்பிச்செல்வதைத் தடுப்பதற்கு ,  நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு காவல் துறை  லுக் அவுட் நோட்டிஸை  அனுப்பியது. 

    ராஜேந்திர பாலாஜி கைது


    இதையும் படியுங்கள் ; சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்து விபத்து.. நல்வாய்ப்பாக தப்பித்த குடும்பம்...

    இதனை தொடர்ந்து  கடல் வழியாக  தப்பிச் செல்வதாக தகவல் வெளியானதால், தூத்துக்குடி கடற்கரையில் இருந்து வேதாரண்யம்  வரையிலான கடற்கரை பகுதிகள் மற்றும் தனுஷ்கோடியில்  கண்காணிப்பு தீவிரப்படுதியது. அதேபோல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநில எல்லைகளிலும்  தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடி வந்தனர். ஏற்கனவே அவர் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக வெளியான ரகசிய  தகவலின்படி  அங்கு போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையே அவர் மீது மேலும் 5 மோசடி வழக்குகள் பதிவாகின.  மேலும் டெல்லியில் பதுங்கியிருப்பதாகக் கூறி அங்கும் விரைந்து ராஜேந்திர பாலாஜியை தேடிவந்தனர். இருப்பினும் தொடர்ச்சியாக  ராஜேந்திர பாலாஜி காவல் துறையிடம் சிக்காமல் தப்பித்துவந்தார்..  

    இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹசன் என்ற பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  காரில் சென்றுகொண்டிருந்தபோது காரை மடக்கி பிடித்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad