Header Ads

  • சற்று முன்

    ஆவின் பொருட்களின் ஏற்றுமதி மீண்டும் தொடங்க இருப்பதாக அமைச்சர் நாசர் போட்டி

    பால்வளத்துறை அமைச்சர் சாமு. நாசர்

    ஆவின் நிறுவணங்களில் தயாரிக்கும்  பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

    ஈரோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டர்.  பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆவின் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட பணி நியமனங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    அமைச்சர்  சாமு.  நாசர்  பேட்டி

    மேலும் ராஜேந்திர பாலாஜி கைதில் அரசியல் ஏதும் இல்லை என்றும். அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்த அவர், தப்பு செய்யவில்லை எனில் ராஜேந்திரபாலாஜி ஏன் ஓடி ஒளிய வேண்டும், தப்பு செய்தவர் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்றார். 

    கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட பணி நியமனங்கள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், இதுவரை தவறு கண்டறியப்பட்ட 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும்.  எஞ்சிய 700 பேரின் பணி நியமனங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

    பால்வளத்துறை அமைச்சர் சாமு. நாசர்

    கடந்த 10 ஆண்டுகளில் ஆவின் நிறுவனம் நலிவடைந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததாக தெரிவித்த நாசர்,  அதிமுக ஆட்சியில் முப்பத்தி ஆறு லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்ட பாலின் அளவு தற்போது 41 லட்சம் லிட்டராக உயர்ந்து இருப்பதாக தெரிவித்தார். 

    மேலும் படிக்க : ’சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 128 அதிகரிப்பு’’.. சவரன் ரூ. 35,936 க்கு விற்பனை..

    அதேபோல் சிங்கப்பூர் மலேசியா மேற்கிந்திய நாடுகளுக்கு ஆவின் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததை அதிமுக ஆட்சியில் முடக்கி வைத்து இருந்ததாகவும், தற்போது ஆவின் நிறுவனத்திற்கு புத்துயிர் அளித்து ஏற்றுமதியை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad