Header Ads

  • சற்று முன்

    ’’இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ ..ஒன்றிய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்..

    தமிழக முதல்வர் ஸ்டாலின்

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.கடிதத்தில் இலங்கை சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்கவும். 75 மீன்பிடி படகுகளை மீட்க வலியுறுத்தியும். 17.01.2022  கடிதம் எழுதியுள்ளார்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை சிறைகளில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக ஒன்றிய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதுடன். கடந்த 2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும் இலங்கை அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத 75 மீன்பிடி படகுகளையும் மீட்டெடுக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோரியுள்ளார். 

    இதையும் படியுங்கள் : ஊரடங்கு நேரத்தில் காவல் துறையினர் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்... டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு...

    வரவிருக்கிற பொங்கல் திருநாளை முன்னிட்டு இலங்கை சிறைகளில் வாடும் 56 மீனவர்களை விடுவித்து அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவது உறுதி செய்திட தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும். அதற்குரிய உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்திட கேட்டுக் கொள்வதாகவும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad