Header Ads

  • சற்று முன்

    ''ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் 84வது பிறந்தநாள்''.. சிறப்பு டூடுல் வெளியிட்டு கௌரவித்த கூகுள்..

    ’’ஸ்டீபன் ஹாக்கிங்கின் 84 வது பிறந்த நாள்

    இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் 84 வது  பிறந்தநாளையொட்டி அவரை நினைவு கூறும் பொருட்டு  பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் சிறப்பு கவன ஈர்ப்புத் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

    ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் ஒரு இயற்பியலாளர். இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் உலகப் போரின்போது  ஆக்ஸ்போர்ட் நகரில் 1942 ஜனவரி 8-ம் தேதி  பிறந்தார். 20 வயதில் நரம்புகளின் இயக்கத்தை பாதிக்கக்கூடிய அரியவகை மூளை தண்டுவட நோயால் பாதிப்புக்குள்ளானர்.  இவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் கணித்த நிலையில் 76 வயது வரை வாழ்ந்த அபூர்வ மணிதர்.

    ’’ஸ்டீபன் ஹாக்கிங்கின் 84 வது பிறந்த நாள்

    இவர் தன் கணித ஆற்றலை கொண்டு கண்ணுக்குப் புலப்படாத கருத்துகளையும் நிகழ்வுகளையும் துல்லியமாக கண்டறிந்து உலக அளவில் புகழ் பெற்றார். தனது உடல் குறையை எண்ணி சிறிதளவும் கவலைப்படாமல். புலம்புவது வீண் என்று வாழ்க்கையில் எடுத்த காரியங்களில் வெற்றி காண வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு அதனை சாதித்து காட்டியுள்ளார்.

    ’’ஸ்டீபன் ஹாக்கிங்கின் 84 வது பிறந்த நாள்

    இதையும் படியுங்கள் : ’’சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 128 அதிகரிப்பு’’.. சவரன் ரூ. 35,936 க்கு விற்பனை..

    இவர் அண்டவெளியின் தோற்றத்தையும் அதன் பரிமாண வளர்ச்சியையும் பற்றிய ஆராய்ந்து மகத்தான கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர். அண்டவியல், குவாண்டம் ஈர்ப்பு, கருங்குழி, வெப்ப இயக்கவியல், குறித்த இவரது ஆய்வுக் கட்டுரைகள் அறிவியலுக்கு முக்கிய பங்களிப்பை பெற்றுள்ளது. ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்  2018 மார்ச் 14 தேதி அன்று மறைந்தார். 

    இவரது 84 வது  பிறந்தநாளையொட்டி அவரை நினைவு கூறும் பொருட்டு  கூகுள் நிறுவணம் சிறப்பு கவன ஈர்ப்புத் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad