Header Ads

  • சற்று முன்

    ’’மாணவிக்கு பாலியல் தொல்லை’’.. தலை மறைவான தலமை ஆசிரியர் கைது..

    தலமை ஆசிரியர் கைது

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

    திசையன்விளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பதினொன்றாம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதாக கூறிய நிலையில் சில மாணவிகளும்  கலந்து கொண்டனர்.

    மாணவிக்கு பாலியல் தொல்லை

    மேலும் பள்ளியில் பயிலும் தாய் தந்தையரை இழந்த மாணவி ஒருவருக்கு  செல்போனில் அடிக்கடி ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதனால் பயந்துபோன  மாணவி  தனது உறவினருடன் தெரிவித்துள்ளர். உறவினர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததை அடுத்து தலமை ஆசிரியரை பணி நீக்கம் செய்தனர்.

    மாணவிக்கு பாலியல் தொல்லை

    இதையும் படியுங்கள் : நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடிகள்...என்கவுன்டர் செய்த போலீஸ் : பின்னணி என்ன??

    கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த திசையன்விளை போலீசர் தலைமறைவான கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை பிடிப்பதற்கு தனிபடைகள் அமைத்து தேடிவந்தனர்.  இந்நிலையில் நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் பதுங்கியிருந்த கிரிஸ்டோபர் ஜெப குமாரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.  இவருக்கு திருமணமாகி  மனைவியும் 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad