Header Ads

  • சற்று முன்

    ஊரடங்கின்போது திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..

     

    Lockdown - Marriage
     

    இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டி பதிவாகிக்கொண்டிருக்கிறது.  இதேபோல் ஒமைக்ரான் வைரஸும்  21 மாநிலங்களுக்கு பரவி விட்டது. இதுவரை 3,017 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதி  வேகமாக பரவிக்கொண்டிருக்கும் வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள  நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

    Lockdown

    அதேபோல் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  ஊரடங்கு நேரங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தடையை மீறி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதேபோல் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. அந்தவகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.   திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ஏற்கனவே திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். 

    இதையும் படியுங்கள் : பொங்கல் பரிசுத் தொகுப்பினை வீட்டிலிருந்து பை எடுத்து வந்து வாங்கிச்செல்லலாம்.. - தமிழக அரசு அறிவிப்பு..  

    Marriage - Representative image

    இந்நிலையில் முழு ஊரடங்கான நாளை (09.01.22)  திருமண நிகழ்ச்சிகளுக்கு  செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கின்போது திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல இருப்பவர்கள் அதற்கான அழைப்பிதழை ( திருமண பத்திரிக்கை)  காண்பித்து   தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களுக்கு  செல்பவர்களுக்கு  அனுமதி வழங்கி காவல்துறை  முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும்  அரசு அறிவித்துள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad