Header Ads

  • சற்று முன்

    ஜன.9 அன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு..

    TNPSC



    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் பல்வேறு துறைசார்ந்த அரசு பணிகளுக்கு  தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில்  நாளை கட்டடக்கலை / திட்ட உதவியாளர் பணிக்கான தேர்வும், நாளை மறுநாள் (09.01.22) என்று ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குள்ளாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக  இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும்  விதிக்கப்பட்டுள்ளது.

    TNPSC Exam


    இந்த நிலையில் புள்ளியல் சார்நிலை பணிக்கான தேர்வு  ஞாயிறு முழு ஊரடங்கு நாளன்று  வருகிறது. இதனால் அன்றைய தினம் தேர்வு நடைபெறுமா, பொதுமுடக்க நாளான அன்று தேர்வு மையங்களுக்கு எப்படி செல்வது போன்ற பல்வேறு  குழப்பங்கள் தேர்வர்களிடையே நிலவி வந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று அறிவித்தது. அதேபோல் அரசும்  தேர்வு எழுதுபவர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. 



    இந்நிலையில் இன்று ஞாயிறு அன்று நடைபெற இருந்த தேர்வு  ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.  நாளை நடைபெற இருந்த கட்டக்கலை/ திட்ட உதவியாளர்  பணிக்கான  தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும்,  ஞாயிறுக்கிழமை  (09.01.22)  நடைபெறவிருந்த ஒருக்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணிக்கான தேர்வு  ஜன.11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

    ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி தேர்வர்கள் 11 ஆம் தேதி தேர்வு எழுதலாம் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad