Header Ads

  • சற்று முன்

    ’’சூரிய ஒளியின் மூலம் சார்ஜ் செய்யும் வசதி’’ விரைவில் அறிமுகமாகும் டெஸ்லா ஸ்மாட்போன்..

    டெஸ்லா பை போன்

    மின்சாரக் கார் உற்பத்தியில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான டெஸ்லா தற்போது உள்ள தொழில் நுட்பத்தின்  வளர்ச்சிக்கேற்ப செல்போன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டெஸ்லா பை போன்

    இந்நிறுவனம் டெஸ்லா பை என்ற பெயரில் அறிமுகமாக உள்ள இந்த செல்போன் எலான் மஸ்க்கின் சேட்டிலைட்  பிராட்பேண்ட் நிறுவனமான ஸ்டார்லிங் உடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் என்றும். இதன் மூலம் இணையதள வசதி உள்ளிட்டவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

    டெஸ்லா பை போன்

    மேலும் டெஸ்லாவில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் தகட்டின் உதவியுடன் சூரிய ஒளியின் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தை அனுப்புவதை எலான்  மஸ்க் கனவுத் திட்டமாக கொண்டுள்ள நிலையில். இந்த டெஸ்லா பை போனை அங்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும். அது குறித்த மேலும் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad