Header Ads

  • சற்று முன்

    ’’80 வயதில் திருமணத்திற்கு பெண் தேடிய அப்பா’’...செத்து கிடைக்காதோ என தலையை துண்டாகிய மகன்.

    தந்தையை கொலை செய்த மகன்

    மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள கேட் ராஜ்குரு நகரை சேர்ந்தவர் சங்கர் போர்டே வயது ( 80 ) .  இவருக்கு திருமணமாகி மனைவியை இழந்து மகன் சேகர் வீட்டில் வசித்து வந்துள்ளார். மகன் தந்தையை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார். இதனால் மனம்உடைந்த முதியவர் இரண்டாவது  திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்து பெண்ணை தேடி வந்துள்ளார்.

    இதற்காக ஆன்லைனிலும் பதிவு செய்து பெண்ணை தேடி வந்ததாக  கூறப்படுகிறது.  இந்த தகவல் மகனுக்கு தெரியவரவே இரண்டாவது திருமணம் தந்தை செய்து கொண்டால் தனக்கு வரவேண்டிய சொத்துகள் அனைத்தும் கிடைக்காது என கருதி தந்தையை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி சேகர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். 

    தந்தையை கொலை செய்த மகன்

    இதில் நிலைகுலைந்து போன முதியவர் கீழே விழுந்துள்ளார். பிறகு ஆத்திரம் தணியாமல் அம்மிக் கல்லை எடுத்து வந்து தலையில் போட்டு கொலை செய்துள்ளார். ஆனல் ஆத்திரம் தனியாத நிலையில்  தலையை வெட்டி தனியாக எடுத்துள்ளார். பிறகு காவல் நிலையத்திற்கு தானாகவே சென்று தனது தந்தையை வெட்டி கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.


    தந்தையை கொலை செய்த மகன்

    மேலும் படிக்க : தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை

    பின்பு காவல்துறையினர் சேகர் வீட்டிற்கு சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து  வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மகனே தந்தையின் தலையை வெட்டி எடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்படுத்தியுள்ளது

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad