Header Ads

  • சற்று முன்

    ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் லோகோவை வெளியிட்டார் புதிய ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்..

     

    ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்..

     சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் ஆவடியில்  புதிதாக  மாநகர காவல் ஆணையர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை நேற்று (01.01.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு  காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  இதில் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக கூடுதல் டி.ஜி.பி.  ரவி பொறுப்பேற்றார்.

     இதேபோல் ஆவடி  மாநகர காவல் ஆணையரகத்தின் முதல் கமிஷனராக  சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றுக்கொண்டார்.  அவருக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். 

    ஆவடி காவல் ஆணையர் அலுவக லோகோ..

    இதில் ஆவடி  காவல் ஆணையர் அலுவகத்தின் கீழ்  ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, எஸ்ஆர்எம்சி, திருநின்றவூர், மாதாவரம் பால்பண்ணை, எண்ணூர், மணலி, மணலி புதுநகர்,  சாத்தாங்காடு, செங்குன்றம், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, நசரத்பேட்டை, செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், காட்டூர், கொரட்டூர், மீஞ்சூர், சோழவரம்  ஆகிய 25 காவல்  நிலையங்கள் அடங்கும்.

     இதையும் படியுங்கள் ; ’’4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு’’ - வானிலை ஆய்வு மையம் தகவல்.

    இதேபோல், ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தின் கீழ் ஒரு இணை  ஆணையர், செங்குன்றம் மற்றும் ஆவடியைச் சேர்ந்த 2 துணை ஆணையர்கள் மற்றும் போக்குவரத்து, நுண்ணறிவு, ஆயுதப்படை பிரிவுகளைச் சேர்ந்த   துணை ஆணையர்கள் 3 பேர் என மொத்தம்  5 துணை கமிஷனர்கள் அடங்குவர். இந்நிலையில் இன்று ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவடி கமிஷனர் அலுவகலத்தின் லோகோவை வெளியிட்டிருக்கிறார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad