Header Ads

  • சற்று முன்

    ’’2- டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் பயண சீட்டு’’ - தெற்கு ரயில்வே அறிவிப்பு.

     

    சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க இரு தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காட்டிய பிறகே ரயில் பயணச் சீட்டு வழங்கப்படுகிறது.

    ஒரு மாதத்திற்குள் முதல் தவணை செலுத்திக் கொண்டோருக்கு , விரைந்து 2ம் தவணை தடுப்பூசி செலுத்துமாறு ஆலோசனை கூறி பின்னர் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

    சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க  இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி எனும் புதிய நடைமுறை இன்று அமலுக்கு வந்த நிலையில் , ரயில் நிலையங்களுக்கு வந்த பலரும் தடுப்பூசி சான்றிதழை காட்டி  பயணச்சீட்டு பெற்றனர். 

    கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட் எனும் இரு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில்  தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான  சான்றிதழை அலைபேசி குறுஞ்செய்தியாகவோ பிரிண்ட் அவுட் சான்றிதழாகவோ பயணச் சீட்டு வழங்குபவர்களிடம் காட்டிய பிறகே  பயணச் சீட்டு வழங்கப்ப்படுகிறது. 

    இரு தவணை செலுத்தியோருக்கு மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படுமென தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு மாதத்திற்குள் முதல் தவணை செலுத்தி இருப்போருக்கும் டிக்கெட் கவுன்டர்களில் இருப்போர் பயணச்சீட்டினை வழங்கினர். 

     

    மேலும் இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்தபிறகும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தவறு என அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். 

    ரயில்களுக்கான மாதாந்திர பயண அட்டைகளில்  இன்று முதல் பயணியரின்தடுப்பூசி எண்ணும் அச்சிட்டு வழங்கப்படுகிறது. ஏற்கனவே வாங்கிய பயணஅட்டைகளை பயன்படுத்தி வருவோர் இரு தவணை தடுப்பூசிக்கான சான்றிதழை பயணத்தின்போது வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad