Header Ads

  • சற்று முன்

    உள்ளாட்சியில் நல்லாட்சி இருக்கிறதா? ஆட்சிமாற்றம் நடந்தும் ஊழல் குறையவில்லை!


    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவு திமுக விற்கு சாதகமாக வந்ததும் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தது மட்டுமல்லாமல் மத்திய பாஜக அரசிடம் கைகட்டி நின்றதை மக்கள் ரசிக்கவில்லை. அதேபோல் அனைத்து துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறந்தது. அதுவும் உள்ளாட்சி துறையில் ஊழல் பற்றி சொல்லவே வேண்டாம். தேர்தல் காலத்தில் திமுக முன்னணி தலைவர்கள் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை புத்தகம் போட்டு ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தனர். 

    அதனால் திமுக மீதும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் மக்கள் பெரும் நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு இருந்து வருகிறது. கடந்த ஆறு மாத காலத்தில் ஓய்வே இல்லாமல் உழைத்து வருகிறார். தனக்கு வாக்கு செலுத்தாதவர்களும் ஆச்சரியப்படும் அளவிற்கு மக்கள் பணியாற்றி வருகின்றார்.


    ஆனால் நகர்புற உள்ளாட்சித் துறையில் கடந்த ஆட்சியில் வாங்கிய கமிஷனை விட இந்த ஆட்சியில் இரண்டரை சதவீதம் கமிஷன் உயர்ந்திருப்பதாக ஒப்பந்ததாரர்கள் புலம்புகிறார்கள். அதேபோல் பள்ளி, மருத்துவமனை கட்டிட கட்டுமான உதிரிபாகங்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்து இருக்கிறது. 

    மேலும் படிக்க : சென்னையில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள். பொங்கலுக்கு ஆறு நாள் விடுமுறை கொண்டாட்டம்.

    இந்நிலையில் துறை அமைச்சர், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கமிஷன் உயர்ந்து போனதால் வேலையின் தரத்தை எதிர்பார்க்க முடியாது. இதுவெல்லாம் மூத்த அமைச்சர் கே.என். நேருவிற்கு தெரியாதா? இருந்தும் ஏன் இப்படி என்று ஒப்பந்ததாரர்கள் புலம்புகிறார்கள்...

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad