Header Ads

  • சற்று முன்

    சென்னையில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள். பொங்கலுக்கு ஆறு நாள் விடுமுறை கொண்டாட்டம்.

     

    koyembedu bus stand


    சென்னையில் இருந்து பொங்கல் விடுமுறையை கொண்டாட ,சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு குடும்பம் குடும்பமாக புறப்பட்டு சென்ற  பொதுமக்கள்.

    தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னை கோயம்பேடு பேருந்துநிலயத்தில் இருந்து வெளிமாவடங்களுக்கு செல்வதற்கு சென்னை உட்பட்ட பல முக்கிய இடங்களில் இருந்து இன்று முதல் 14 தேதி வரை மூன்று நாட்களில் 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்தது.

    அந்தவகையில் முதல் நாள் சிறப்பு பேருந்துகளாக  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாவடங்களுக்கு  தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகள் மற்றும்  சிறப்பு பேருந்துகளாக 420 என (11-01-22) மட்டும் 2,520 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. அதே போன்று பல்வேறு முக்கிய இடங்களில் 1,145 பேருந்துகள் இயக்கபடுகிறது.

    பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக குடும்பம் குடும்பமாக பொதுமக்கள்  புறப்பட்டு சென்றனர்.

    கோயம்பேடு பேருந்துநிலயத்தில் உடல் வெப்ப பரிசோதனை

    பேருந்து நுழைவாயில் அமைத்திருந்த உடல் வெப்ப பரிசோதனையில் பயணிகளை  வரிசையில் நிற்க வைத்து உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியோடு பயணிக்க வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகள் சார்பாக 5 நிமிடத்திற்கு ஒரு முறை பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் படிக்க : சென்னை விமான நிலையத்தில் ரூ. 60.71 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்...சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி..

    கொரோனா காலத்தில் பொங்கல் பயணத்தின் போது பெரிய அளவில் கூட்டம் இருக்குமோ என்ற அச்சம் இருந்தது. மேலும் பேருந்துகள் வசதி குறித்தும் பயம் இருந்தது.  இருப்பினும் நேரில் வந்து பார்க்கையில் மக்கள் தேவைக்கேற்ப பேருந்துகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றிகின்றனர் என பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    கோயம்பேடு பேருந்துநிலயத்தில்

    அதே போன்று (12-01-22) இன்று தினசரி இயக்கப்படக்கூடிய 2,100 பேருந்துகளோடு சிறப்பு பேருந்தாக 1,660 என மொத்தம் 3,760 பேருந்துகள் சென்னையில் இருந்து வெளிமாவடங்களுக்கு இயக்கப்பட உள்ளது. அதேபோல பல்வேறு முக்கிய இடங்களில் 2,145 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad