Header Ads

  • சற்று முன்

    அதிமுக தான் ஸ்டிக்கர் ஒட்டி போலி ஆட்சி நடத்தியது. அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்!

     


    அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்வதாக எடப்பாடி பழனிசாமி அபாண்டமான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

    சமச்சீர் கல்வி புத்தகத்தில் ஸ்டிக்கர் ஒட்ட தொடங்கி வள்ளுவரையே ஸ்டிக்கர் ஒட்டி மறைந்த ஆட்சி, கஜா புயல் நிவாரணத்தின் போது தனியார் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது அதிமுக ஆட்சி, என்றும் அதிமுக வை போன்று ஸ்டிக்கர் ஒட்டும் ஆட்சி திமுக ஆட்சி அல்ல எனக்கூறினார்.

    ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவன உதவியுடன் 95 விழுக்காடு பணிகள் நிறைவுற்ற நிலையில் ஆட்சி பொறுப்பிலிருந்து விலகிய  பின்னர்  அதிமுக ஆட்சி தாங்கள் கொண்டுவந்தது போலும் கோயம்பேடு பேருந்து நிலையம், ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் அதிமுக ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது.

    இன்றைக்கு திறக்கப்படவுள்ள விருதுநகர் மருத்துவக் கல்லூரியும் கூட திமுக ஆட்சியில் அறிவித்து தான்.

    நீங்கள் பெற்ற பிள்ளைக்கு பேர் வைதீர்களே சோறு வைதீர்களா என கேட்க தோன்றுகிறது.

    திமுக அரசின் திட்டங்கள் கோடி சூரியனுக்கு இணையானது. அதன் ஒளி உதிரி நட்சத்திரங்களுக்கு தேவைபடுமே, தவிர திமுகவுக்கு தேவைப்படாது எனக்கூறினார்.

    மேலும் படிக்க : காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசருக்கு கொரோனா...

    விதைக்கிற நேரத்தில் வெளியூர் சென்று விட்டு அறுக்கும் நேரத்தில் அரிவாளை தூக்கி வரும் நிலை போல் உள்ளது எதிர்க்கட்சி தலைவரின் பேட்டி இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.


    பாக்ஸ்கான் தொழிற்சாலை

    பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டு 12 ம் தேதி முதல் தொழிற்சாலை செயல்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் தெரிவித்திருந்தார். எனவே அங்குள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டு இருந்தார்.

    பாக்ஸ்கான் தொழிற்சாலை

    இன்று அந்த தொழிற்சாலை தொடங்கப்படுகிறது என்ற செய்தியைக் கேட்டு மகிழ்கிறேன். இது முதல்வர் மீது தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று தங்கம் தென்னரசு கூறினார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad