Header Ads

  • சற்று முன்

    அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைப்பு... அமைச்சர் பொன்முடி தகவல்

     


    தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல்கலைக் கழக தேர்வுகள் ஜனவரி 20ம் தேதிக்கு பின் நடத்தப்படும் என அறிவித்திருந்ததாக கூறினார்.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களின் நலன் கருதி தேர்வு நடைபெறும் தேதி கொரோனா தாக்கத்தைப் பொறுத்து பின்னர் அறிவிக்கப்படுவதோடு, மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேர்வு தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


    மேலும் படிக்க : தேர்தல் அறிவிப்பு - "தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம்"  

    மாணவர் நலன் கருதி எடுக்கப்படும் முடிவு என்பதால் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் இந்த முடிவு பொருந்தும் என கூறிய அவர், அரசின் உத்தரவிற்கு மீறி தேர்வுகளை நடத்தப்பட்டால் கல்லூரி மூடுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad