Header Ads

  • சற்று முன்

    தமிழக அரசு வழங்கிய பொங்கள் பரிசு தொகுப்பின் எடை குறைவு ... பொதுமக்கள் அதிர்ச்சி..


    பொங்கள் பரிசு தொகுப்பிள் முறை கேடு

    தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் முந்திரி திராட்சை 50 கிராமுக்கு மாறாக 10 கிராம் இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏலக்காய் வெறும் இரண்டு கிராம் மட்டுமே உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

     தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றனர். இந்த பரிசு வழங்குவதில் ஏதாவது குறை இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்திருந்தார்.

     இந்நிலையில் தைப்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் நோக்கில் 21 பொருள்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 21  பொருட்கள் அடங்கிய  கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், போன்ற பொருட்களும் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, ஆகிய மல்லிகை பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்திற்காக ரூ.1088 கோடி  செலவிடப்பட்டுள்ளது.

    பொங்கள் பரிசு தொகுப்பிள் முறை கேடு

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழங்கப்பட்டு வந்த 21 பொருட்களில் ஒரு சில பொருட்கள் தரம் அற்ற நிலையில் இருப்பதாகவும் ரேஷன் அட்டைதாரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  மேலும் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  முந்திரி போன்ற பொருட்களின் எடை சரியாக இல்லை என்றும்,   21 பொருட்களுக்கு மாறாக 18 பொருட்கள் மட்டுமே உள்ளதாகவும். கோதுமைமாவு உள்ளிட்ட பொருட்களில் வண்டுகள் இருப்பதாகவும். வெல்லம் தரமானதாக இல்லை என்றும் அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

    மேலும் படிக்க : ’சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து’’....ஜேசிபி உதவியுடன் மீட்கபட்ட தொழிலாளி..

    குறிப்பாக காஞ்சிபுரம் பகுதியில் அதிக அளவு நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் முந்திரி, ஏலக்காய், திராட்சை, பொருள்களில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், என இருக்க வேண்டும். ஆனால் முந்திரி வெறும் 10 கிராம் திராட்சை 15 கிராம் ஏலக்காய் 2 கிராம் என பெருட்டளின் எடை குறைவாக உள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பரிசு பொருட்டளின் பாக்கெட்டுகள் உடப்பு  போன்ற குறைகள் இருப்பதால் மக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே பிரச்சனை எழுகிறது.

    இந்த மாதிரியான தகராறுகளை குறைப்பதற்கு தமிழக அரசு 21 வகையான பொங்கல் பரிசு பொருட்கள் எந்த குறைபாடும் இல்லாமல் ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்தாள் எந்த மனக்கசப்பும் வராது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து குழுக்கள் அமைத்து எடை குறைவாக வழங்கப்படும் கடைகளில் ஆய்வு  மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad