Header Ads

  • சற்று முன்

    சென்னையில் முக கவசம் அணியாத 2,544 பேருக்கு அபராதம்...


    முக கவசம்

    தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது, அதிலும் மற்ற மாவட்டங்களைவிட  தலைநகர் சென்னையில் வைரஸ் பரவல் வேகம் அதிகமெடுத்திருக்கிறது.  இதனால் சென்னை மாநகராட்சி  நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.  அதன்  ஒரு பகுதியாக காவல் துறையுடன் இணைந்து பொது இடங்களில் முக கவசம் அணியாதோர் மற்றும்  சமூக  இடைவெளியை கடைபிடிக்காதோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    இதையும் படியுங்கள் : அனுமன் ஜெயந்தி : 1,00,008 வடமாலையில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை...

    அதன்படி  டிசம்பர் 26 ஆம் தேதியிலிருந்து  நேற்று ( ஜன., 1) வரை ஒரு வாரத்தில் 2,544  பேர் முக கவசம் அணியாமல்  காவல் துறையிடம் சிக்கியிருக்கின்றனர். அவர்கள் அத்தனை பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

    முக கவசம்

    மேலும், சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 136 வழக்குகள் பதியப்பட்டு, 527 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறை  தெரிவித்துள்ளது.  பொதுமக்கள் கொரோனா  விதுமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்வும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.







    No comments

    Post Top Ad

    Post Bottom Ad