Header Ads

  • சற்று முன்

    ஆவடி, தாம்பரம் கமிஷனர் அலுவலகங்களுக்கு 20 நவீன ரோந்து வாகனங்கள்..

     

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஆவடி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக பயன்பாட்டிற்காக 20  புதிய ரோந்து வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்  நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்பட்டு புதிதாக  தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும்  ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகங்கள் தொடங்கப்பட்டன.  அதன்படி தாம்பரம் மற்றும் ஆவடியில்  புதிதாக கட்டப்பட்ட  மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களை ஜனவரி 1 ஆம் தேதி  (01.01.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.  இதில் தாம்பரம்  கமிஷ்னராக  கூடுதல் டி.ஜி.பி.  ரவியும், ஆவடி  மாநகர காவல் ஆணையரகத்தின் முதல் கமிஷனராக  சந்தீப் ராய் ரத்தோரும்  பொறுப்பேற்றுக்கொண்டனர். 

    நவீன ரோந்து வாகனங்கள்



    இதில் தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ்  20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும்  ஆவடி மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் 25 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையில்  இன்று தாம்பரம் மற்றும் ஆவடி  காவல் ஆணையரக அலுவலகங்களுக்கான புதிய நவீன ரோந்து கார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 20 புதிய நவீன  ரோந்து வாகனக்களையும் பயன்பாட்டிற்காக அவர்  கொடியசைத்து தொடக்கி வைத்தார்.  

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



    காவல்துறையின் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி சென்னை காவல்  ஆணையர் அலுவலகம் தவிர பிற  ஆணையர் அலுவலகங்களின் கீழ் இயங்கும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தலா ஒரு ரோந்து வாகனம் வீதம் 106  நவீன ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.  சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள மகிந்திரா பொலிரோ நியோ  ரோந்து வாகனங்களை  வழங்கிடும் விதமாக, முதல்கட்டமாக  ஆவடி, தாம்பரம் கமிஷனர் அலுவலகங்களுக்கு தலா 10 வாகனங்களை வழங்கினார்.

    சிவப்பு நிறத்தில் உள்ள இந்த ரோந்து கார்களில் ஒளிரும் விளக்குகள்,  வாக்கி டாக்கி கருவிகள்,  சைரன், வழித்தட வரைபடங்களைக் காட்டும் டிஜிட்டல் கருவி (ஜிபிஎஸ் ),  பொது அறிவிப்புகளை வெளியிட மைக் மற்றும் ஒலிபெருக்கி, வயர்லெஸ் தொடர்பு சாதனம் போன்ற நவீன வசதிகள் உள்ளன.





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad