Header Ads

  • சற்று முன்

    உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு... முந்துகிறார் அகிலேஷ் யாதவ்...

     

    பிரியங்கா காந்தி

    உத்திரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அதனால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. 

    பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜான் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சி என்று நான்கு முனை போட்டியாக இருந்து வருகிறது. அதில் உ.பி.யில் பிப்ரவரி 10 ந் தேதி முதல்  தேர்தல்  7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தியாவில் 403 தொகுதிகள் கொண்ட பெரிய மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சி அகில இந்திய அளவில் தனது ஆதிக்கத்தை செலுத்தும். அந்த வகையில் உ.பி. மாநிலத்தின் தேர்தல் நிலவரம் எல்லோரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த காலங்களில் பிரியங்கா காந்தி உ.பி.யில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பயன் அளிக்கவில்லை என்பதே களநிலவரம். பல்வேறு ஊடகங்களில் வெளியாகி வரும் கருத்து கணிப்பில் 10 முதல் 15 தொகுதிகள் வரை பிடித்து மீண்டும் காங்கிரஸ் கடைசி இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. 


    அதேபோல் சமாஜ்வாதி கட்சிக்கும் பாஜக-விற்கும் கடும் போட்டி இருந்தாலும் 220 முதல் 230 தொகுதிகள் வரை பிடித்து மீண்டும் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad