Header Ads

  • சற்று முன்

    11 நாட்கள் வாழ்ந்துவிட்டு.. 11 ஆண்டுகள் பிரிந்திருந்த தம்பதி.. மனைவி கூறிய காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி..



    விவாகரத்து கேட்டு கோட்டுக்கு செல்பவர்கள் பல்வேறு வினோதமான காரணங்களை முன்வைப்பார்கள்.. அப்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ஒருவர்.. வழக்கு விசாரணையின் போது அவரது மனைவி கூறிய காரணம் நீதிபதிகளையே  அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் சிங் என்பவருக்கு கடந்த 2010 ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவரும் அவரது மனைவியும் 11 நாட்கள் வாழ்ந்த நிலையில், பதினோராவது நாள் மனைவியை ஏதோ ஒரு வேலை காரணமாக மாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு விட்டிருக்கிறார். அன்றுதான் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த கடைசி நாள்.. 


    அதன் பிறகு அந்தப் பெண் கணவருடன் வாழாமல் தனது தாயின் வீட்டிலேயே இருந்திருக்கிறார். சந்தோஷ் சிங் பலமுறை சென்று அழைத்தும், எதேதோ காரணங்களைச் சொல்லி அந்தப் பெண் வராமல் தனது தாய் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இவ்வாறு 11 வருடங்கள் கடந்து சென்றுவிட்டன. இதனால் விரக்தி அடைந்த சந்தோஷ் சிங் கும்பலநல நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்கு அந்தப் பெண் தனது அரசுப்பணி காரணம் காட்டி ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். 

     

    இதனால் சந்தோஷ் பிலாஸ்பூர் உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.  அந்த வழக்கு விசாரணையின்போது, ஆஜரான சந்தோஷின் மனைவியிடம் ஏன் கணவருடன் சேர்ந்து வாழவில்லை என நீதிபதிகள் கேட்டுள்ளனர்.  அதற்கு அந்த பெண்  ”நல்ல நேரம் எதுவும் வரவில்லை”  அதனால்தான் கணவருடன் செல்ல வில்லை என கூறியிருக்கிறார். 

    இதையும் படியுங்கள் ; ’’விழுப்புரத்தில் போலியான பெயரில் நகைக் கடன் பெற்று மோசடி’’ விசாரணையை தீவிரபடுத்திய போலீஸ்..  

    இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி, 11 ஆண்டுகளாக நல்ல நேரம் வரவில்லையான என கேட்டுள்ளனர். மகிழ்ச்சியான குடும்பம் அமையவேண்டும் என்றால் பொதுவாக நல்ல நேரம் தேவைப்படும்.. ஆனால் இந்த வழக்கில் உறவை முறிப்பதற்கு நல்ல நேரம்  ஒரு கருவியாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது என வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து அந்த தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி அனுப்பி வைத்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad