Header Ads

  • சற்று முன்

    தாயின் உடலை 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்த மகள்கள்..

    தாயின் உடலை சுமந்து சென்ற மகள்கள்

    தாயின் உடலை 4 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று நான்கு மகள்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது..

    ஒடிசா மாநிலத்தில் பூரி நகரில் உள்ள மங்களகாட் பகுதியில் ஜாதி நாயக் என்ற மூதாட்டி நேற்று காலமானார். இவர்களுக்கு இரு மகன்களும் 4 மகள்களும் உள்ளனர். இவரது மகள்கள் திருமணமாகிவிட்ட நிலையில் அவரது மகன்களும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் தனித் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். அவரது மகன்கள் கடந்த 10 வருடங்களாக மூதாட்டியை புறக்கணித்துள்ளனர்.  

    மகள்களும் திருமணமாகி விட்டுச் சென்ற நிலையில், மகன்களும் கைவிட்ட நிலையில், மூதாட்டி செய்வதறியாமல் திகைத்து நின்றார். பின்னர் கணவருடன்  வசித்து வந்த மூதாட்டி கணவரின் இறப்புக்குப் பிறகும் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். மூதாட்டி சிறு வியாபாரம் செய்து தன்னுடைய உணவுக்கான செலவுகளை செய்து வந்துள்ளார்.

    இதையும் படியுங்கள் ; சென்னையில் முக கவசம் அணியாத 2,544 பேருக்கு அபராதம்...

    இந்த நிலையில்தான் மூதாட்டி இறந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினர் அவரது இரண்டு மகன்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சிறிதளவும்  கவலை கொள்ளாமல் அவர்கள் இருவரும் இறுதி சடங்குகளை செய்ய வரவில்லை. இந்த நிலையில்தான் கலாச்சார தடைகளை உடைத்து மூதாட்டியின் மகள்கள் 4 பேரும் தங்களது தாயை தகனம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து இறுதி சடங்குகளை செய்வதற்காக சுடுகாடு வரை  4 கிலோ மீட்டர் தூரம் தன்னுடைய தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad