Header Ads

  • சற்று முன்

    புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு..

     

    உயிரிழந்த சிறுவன்


    புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது, தவறுதலாக  குண்டு பாய்ந்து  சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுவன், உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை  மாவட்டம்  நார்த்தாமலை அருகே உள்ள அம்மாசத்திரத்தில் துப்பாக்கி பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது.  இந்த மையத்தில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் கடந்த 30 ஆம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பயிற்சியின்போது வீரரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு, தவறுதலாக புகழேந்தி என்னும் 11 வயது சிறுவன் தலையில் பட்டது. 

    துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்

    பயிற்சியின் போது தவறுதலாக துப்பாக்கியிலிருந்து  2 தோட்டாக்கள் வெளியேறி சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சென்றிருக்கிறது.  அதில் ஒன்று  குண்டு நார் த்தமலை அருகே உள்ள கொத்தமங்களத்துப்பட்டியைச் சேர்ந்த  முத்து என்பவரின் வீட்டின் சுவற்றை துளைத்திருக்கிறது. . மற்றொன்று வீட்டின்  உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்த அவரது பேரன் புகழேந்தியின் தலையில் பட்டிருக்கிறது.  இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் புகழேந்தி ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் இன்று மாலை சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இதையும் படியுங்கள் ; துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..

    இதனையடுத்து அவரது உறவினர்கள்  மற்றும் கிராம மக்கள்  திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டபட்டனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad