Header Ads

  • சற்று முன்

    சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்து விபத்து.. நல்வாய்ப்பாக தப்பித்த குடும்பம்...

     

     

    தீ பிடித்து எரியும் கார்..

     நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே  மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    குன்னூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ் என்பவர்  குடும்பத்தினருடன் தனது ரெனால்ட் டஸ்டர் காரில் பெங்களூரு சென்றுள்ளார்.  இன்று  மீண்டும் பெங்களூருவில் இருந்து  குன்னூர்   நோக்கி வந்து கொண்டிருந்தபோது,  மரப்பாலம் அருகே தீடீரென காரின் முன்பக்கம் லேசாக புகை வந்துள்ளது. உடனடியாக  சுதாரிதுக்கொண்ட தர்மராஜ், காரை சாலையில் ஓரமாக நிறுத்தியுள்ளார். பின்னர் மனைவி குழந்தைகளுடன் வெளியேறியிருக்கிறார்.

    தீ பற்றி எரியும் கார்


    அவர்களில் இறங்கிய சிறிது நேரத்திலேயே காரில் புகை  அதிகரித்து கார் முழுவதும் தீப்பற்றியது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த  தீயணைப்புத் துறையினர் கொழுந்துவிட்டு எரிந்த  தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.  அதற்குள்ளாகவே கார் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.   இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது..

    அதிர்ஷ்டவசமாக  தர்மராஜ்  குடும்பத்தினருடன்  காரிலிருந்து வெளியேறியதால்  உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவ்வழியே சென்ற பொதுமக்கள் கார் எரிந்ததை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad