Header Ads

  • சற்று முன்

    ஊரடங்கிலும் கட்டுக்குள் வராத கொரோனா.. தமிழகத்தில் 12 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு..

     


    தமிழகத்தின் இன்று ஒரே நாளில்  12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமெடுத்துள்ளது. கடந்த  03.01. 2022 அன்று  கொரோனா  பாதிப்பு 1,728 இருந்தது. இன்றையதினம் 12 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.  ஒரு வாரத்திற்குள்ளாக தொற்று பரவல் வேகம் பன்மடங்காக உயர்ந்திருக்கிறது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த  ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.. மாறாக  புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னரே தொற்று பாதிப்பு அதிரடியாக உயர்ந்திருக்கிறது. 



    கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து நாள்தோறும் சுகாதாரத்துறை  அறிக்கை வெளியிட்டு வருகிறது.  அதன்படி இன்று  வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 12,895 பேர் புதிதாக கொரோனா தொற்றாப் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனால் மொத்த தொற்று பாதிப்பு 28 லட்சத்து 286 ஆக அதிகரித்துள்ளது.  இன்று தொற்று பாதித்தவர்களில் 7 ,558 பேர் ஆண்கள் எனவும், 5,337 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் அதிகபட்சமாக  சென்னையில் 6,186 பேருக்கும், செங்கல்பட்டில் 1,512 பேருக்கும், திருவள்ளூரில் 702 பேருக்கும் மற்றும் கோவையில் 608 பேருக்கும் தொற்று உறுதியாகியிருக்கிறது. இதேபோல் இன்று கொரோனா தொற்றால் 12 பேர்  உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,855  ஆக உயர்ந்துள்ளது. 

      


    மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,808 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளன. இதுவரை 21 லட்சத்து 12 ஆயிரத்து 096 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.  இன்று  1 லட்சத்து 47 ஆயிரத்து 705 பேருக்கு  புதிதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி மருத்துவமனைகளிலும், வீட்டில் தனிமை படுத்திக்கொண்டும் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 335 ஆக உள்ளது.    



     



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad