Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் 5 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு... சென்னையில் மட்டும் 2,481 பேருக்கு தொற்று...

     

     

    முகவரி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக  கொரோனா வைரஸின் தாக்கம்  குறைந்து காணப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு இளைப்பாறுவதற்குள், தற்போது கொரோனா 3வது அலை வீசத் தொடங்கியிருக்கிறது.  அந்த அளவிற்கு தொற்று பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சில மாதங்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு  5,000 நெருங்கியிருக்கிறது.  

    கொரோனா பரிசோதனை

    கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் புதிதாக 4,862 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 2,481 பேருக்கும் , செங்கல்பட்டில் 596 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் கோவையில் 259 பேருக்கும், திருவள்ளூரில் 209 பேருக்கும் தொற்று பரவியுள்ளது.  சுமார் 1 லட்சத்து 17 ஆயிரத்து 382 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில்  4,862 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் தமிழ்நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 60 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 688 பேர் குணமடைந்திருக்கின்றனர்.  இதனால் இதுவரை 27 லட்சத்து 07 ஆயிரத்து 58 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.  தற்போது 16 ஆயிரத்து 577 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கையும்  36 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது.


    Corona Report

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad