நடிகர் அர்ஜுன் மாமனார் காலமானார்.!! ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த திரையுலகினர்.
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ராஜேஷ் சிறுவயது முதலே ஏராளமான நாடகங்களில் நடித்து வந்தார் வித்யாசாகர் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களுக்காக தனது பெயரை ராஜேஷ் என்று மாற்றிக் கொண்டார். 1960-களில் திரைத்துறையில் நுழைந்த அவர் சோஸா குட்ஃபார்ட்யூன், கலியுகா, வீர சங்கல்பா, கங்கா கௌரி உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இறுதியாக அவர் கௌரவ வேடத்தில் நடித்த ஓல்ட் மங்க் திரைப்படம் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. கலாதபஸ்வி ராஜேஷ் என்று திரையுலகினரால் அழைக்கப்பட்டார். இவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. அதில் ஒரு மகள் ஆஷாராணியை நடிகர் அர்ஜுன் திருமணம் செய்துள்ளார்.
சுவாசப் பிரச்சனை காரணமாக கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மூச்சுத் திணறல் அதிகமானதால் அவருக்கு ஆக்சிசன் பொருத்தப்பட்டது எனினும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
No comments