Header Ads


  • ஓடும் பேருந்தில் ஏற முயன்ற பள்ளி மாணவன் பலி..! கும்பகோணம் அருகே நேர்ந்த சோகம்.

    கும்பகோணம் அருகே பள்ளி மாணவன் பலி

    11-ஆம்  வகுப்பு பள்ளி மாணவன் ஓடும் பேருந்தில் ஏற முயன்று நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம் அருகே ஆரியத்திடல் கிராமத்தில் உள்ள கற்பகம் நகரில் வசிக்கும் மறைந்த அமானுல்லா மகன் முகமது ஆதில் வயது ( 16 ). இவர் கும்பகோணம் அருகே உள்ள அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்கு செல்ல கிளம்பிய ஆதில் நரசிம்மபுரத்திலிருந்து  கும்பகோணம் நோக்கி வந்த  நகரப்பேருந்து வண்டி என் 20-இல் ஏற முயன்றுள்ளார்.  ஓடும் பேருந்தில் ஏற முயன்ற ஆதில் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.

    கும்பகோணம் அருகே பள்ளி மாணவன் பலி

    இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பக்கிரிசாமி துரிதமாக செயல்பட்டு பயணிகளை இறக்கிவிட்டு முகமது ஆதிலை பேருந்திலேயே அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுடனர். தற்போது மாணவனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    2 comments:

    1. Best Online Casinos 2021: 9 Best Casino Sites and Apps
      Online casinos offer various types 제주도 출장마사지 of games and casino 여수 출장안마 games for various devices including tablets, 광주 출장마사지 phones, Top 7 Casino Sites. Rating: 4.6 · ‎6 대구광역 출장샵 votes 충주 출장샵 · ‎Free · ‎iOS · ‎Game

      ReplyDelete
    2. The King Casino Archives - Hertzaman
      The King Casino Archives, including news, articles, videos, address, gaming 더킹카지노 도메인 info, The 카지노 King Casino & Hotel 메리트 카지노 도메인 in Henderson, NV is one 우리 카지노 계열 of the newest 더킹카지노 회원가입 hotels and motels on

      ReplyDelete

    Post Top Ad

    Post Bottom Ad