Header Ads


  • கலைகட்டிய கன்னியாகுமரி.. மளமளவென குவிந்த சுற்றுலா பயணிகள்.!

    கன்னியாகுமரி

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழாவிற்கு வருகை தந்த கேரள பக்தர்கள் பலர் கன்னியாகுமரிக்கும் வருகை தந்துள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் நேற்று வெளி மாநில சுற்றுலா பயணிகள் உட்பட மக்கள் கூட்டத்தாலும் ஏராளமானோர் குவிந்த வண்ணம் காணப்பட்டனர்.

    அதிகாலையில் திரிவேணி சங்கமத்தில் உதிக்கும் சூரியனை கண்டு பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் கடலில் குளித்தும் பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்தும் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பூம்புகார் படகு சவாரி மூலம் பார்த்து ரசித்தனர்.

    கன்னியாகுமரி

    காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், காட்சி கோபுரம் மற்றும் பழத் தோட்டம், சுற்றுச்சூழல் பூங்காவையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு கண்டு மகிழ்ந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கம் போல் காலை 8 மணி முதல் தொடங்கி படகு சேவை 1:30 வரை நடந்தது கடல் சீற்றம் காரணமாக படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

    திருவள்ளுவர் சிலைக்கு நேற்று காலை முதலே கடல் சீற்றத்தால் படகு இயக்கப்படவில்லை நேற்று மதியம் வரை 4800 பேர் படகு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad