ஆவின் "நெய்" விலை அதிரடியாக உயர்வு... பொதுமக்கள் வேதனை.!
ஆவின் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆவின் தயாரிப்பு நெய்,தயிர், ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் சத்தமில்லாமல் உயர்த்தியுள்ளது. குறிப்பாக ஆவின் நெய் லிட்டருக்கு ரூ 30 வரை உயர்த்தியுள்ளது. இது சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தின் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்று மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வரை குறைத்து ஏழை எளிய மக்களின் இதயத்தில் இடம் பிடித்தார். ஆனால் ஒன்பது மாதத்திற்கு பின்னர் ஆவின் உற்பத்தி பொருட்களின் விலையை அந்த நிறுவனம் சத்தமில்லாமல் உயர்த்தி ஆட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் நிறுவனத்தின் உயரதிகாரிகள் தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதனை உறுதி படுத்தும் வகையில் தற்போது ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விலையேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments