ஆவடி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஆவடி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
பணியில் இருந்த போதே உயிரிழந்ததால் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகம்....
ஆவடியில் இருந்து தாம்பரம் செல்லக்கூடிய 202 வழித்தடத்தில் நடத்துனராக பணிபுரிந்தார் எல். ஸ்ரீ தரன் 51 வயது (53385) என்பவர். இவர் சனிக்கிழமை பிற்பகல் ஆவடியில் இருந்து தாம்பரம் செல்லக்கூடிய 202 பேருந்தில் நடத்துனராக பணியில் இருந்தார்.
அதே பேருந்து பிற்பகல் தாம்பரத்தில் இருந்து ஆவடியை நோக்கி வரும்போது நடத்துனர் ஸ்ரீ தரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அப்பொழுது எதிர் பாராத விதமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் வாரிசு இருப்பதாக கூறப்படுகிறது.
No comments