பள்ளி மாணவியை கார்ப்பமாக்கிய மின்வாரியத் துறை அதிகாரி கைது.
தமிழகத்தில் சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை மின்வாரிய துறையில் ஊழியராக பணியாற்றி வரும் ராஜசேகர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு சிறுமி அடிக்கடி செல்வது வழக்கம் ராஜசேகர் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் உதவி தணிக்கை அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி ஒரு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர் மகன் கல்லூரியிலும், மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராஜசேகரன் சிறுமியை யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக பெற்றொர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர் அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது சிறுமி ஆறு மாத காலமாக கர்ப்பமாக உள்ளார் என்ற அதிர்ச்சி செய்தியை மருத்துவர் தெரிவித்தனர். இதனை அடுத்து சிறுமியிடம் இதுகுறித்து கேட்டபோது சிறுமி ராஜசேகர் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பொற்றொர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments