கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள்
திருவள்ளூர் அருகே கரும்பு தோட்டத்திற்குள் மூன்று காட்டு யானை புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பள்ளிப்பட்டு பகுதியில் ஈச்சம்பாடி கிராமம் உள்ளது.
அந்த கிராமத்தில் முரளி என்பவரது கரும்பு தோட்டத்திற்குள் 3 காட்டு யானைகள் புகுந்தன.
இதனால் அந்த பகுதி கரும்பு விவசாயிகள் பீதி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.
மேலும் அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வனத்துறையினருடன் சேர்ந்து காட்டு யானைகளை விரட்டி வருகின்றனர்.
இதனால் அந்த பகுதி பரபரப்பாகக் காணப்படுகிறது.
No comments