Header Ads

  • சற்று முன்

    ஆவடி அருகே கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்.

    செம்மரக்கட்டைகள்

    ஆவடி அடுத்த காட்டூர் தொழிற்பேட்டையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்.

    ஆவடி அடுத்த காட்டூரில் சிறு குறுந் தொழில் நிறுவனங்கள் அடங்கிய தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அங்கே ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக  சென்னையிலுள்ள  நுண்ணறிவு மற்றும் புலனாய்வு வனத்துறை பிரிவுக்கு இன்று  ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதனையடுத்து உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன், வனச்சரக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்துக்கு  விரைந்து சென்று  பின்னர், அங்கிருந்த பொதுமக்களின் முன்னிலையில் குடோனை உடைத்து சோதனை செய்தனர். அப்போது, அங்கு செம்மரக்கட்டைகள் துண்டு, துண்டாக வெட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

    இதனையடுத்து வனத்துறையினர் அங்கிருந்த சுமார் 2-டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதன்பிறகு, வனத்துறை அதிகாரிகள் செம்மரக்கட்டைகளை கும்மிடிப்பூண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

    மேலும், இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து செம்மரக்கட்டைகளை கடத்தி பதுக்கி வைத்த குடோன் உரிமையாளர் மற்றும் உடந்தையாக இருக்கும் நபர்களை தேடி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad