Header Ads

  • சற்று முன்

    விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நண்பன்.. துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய உயிர்த்தோழன்: நடந்தது என்ன?


    தொலைதூரத்திலிருந்து நண்பனின் உயிரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

    சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் லோகேஷ் என்பவர் நள்ளிரவு 2:00 மணியளவில் டிஎஸ்பி ஆனந்தகுமாருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் ஈரோட்டில் உள்ள தனது நண்பர் அஜித்குமார் காதல் விவகாரத்தில் விஷ மாத்திரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் அவரை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என டிஎஸ்பி ஆனந்தகுமாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதனை அடுத்து இளைஞரின் கோரிக்கையை ஏற்று அஜித்குமாருக்கு டிஎஸ்பி தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. இதனையடுத்து அவரது செல்போனை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து ஆய்வு செய்யுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து செல்போன் சிக்னல் ஆப்பக்கூடல் புன்னம் கிராமத்தில் காண்பித்துள்ளது.இதனையடுத்து டிஎஸ்பி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் அஜித்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். 

    அங்கு அவரது பெற்றோர்கள் வெளியில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி விஷயத்தை கூறியுள்ளார். இதனையடுத்து அஜித்குமார் ரூமுக்கு சென்று பார்த்தபோது அஜித்குமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நண்பரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று அவர் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த சம்பவம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad