ஆவடி மாநகராட்சியின் மேயர், துணை மேயருக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது
ஆவடி மாநகராட்சி முதல் மேயர் தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை 22 ந் தேதி முடிவடைந்தது. அதில் 35 பேர் திமுக உறுப்பினர்களும், அதிமுக 4பேர், மதிமுக 3 பேர், காங்கிரஸ் 3 பேர், விசிக 1 மற்றும் சுயேட்சை 1. என்று 48 மாமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அதிமுக உறுப்பினர்கள் 2 பேர் திமுக வில் இணைந்து விட்டனர். அதனால் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆவடி மாநகராட்சி பட்டியல் வகுப்பைச் சேர்ந்த (பொது) வர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி 9 வது வார்டு திமுக உறுப்பினர் உதயகுமார் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பத்தாம் வகுப்பு வரை படித்து உள்ளார். அதேபோல் துணை மேயராக மதிமுக சார்பில் 23 வது வார்டு உறுப்பினர் சூரியகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி மாநகராட்சி முதல் மேயராக உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணை மேயராக சூரியகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
No comments