சென்னை மாநகராட்சி மேயராக இளம் பெண் தேர்வு.!
சென்னை மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா என்பவரையும், துணை மேயராக மு.மகேஷ்குமார் என்பவரையும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி. 200 வார்டுகளை கொண்ட இந்த மாநகராட்சி பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பெண்ணிற்கு மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திரு.வி.க.நகர் 74 வது வார்டில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆர்.பிரியா மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மிகவும் இளம் வயது உறுப்பினரான இவர் M.com வரை படித்த பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தியாகராயநகர் பகுதி செயலாளர் மு.மகேஷ்குமார் என்பவருக்கு சென்னை மாநகராட்சி துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
No comments