ஆந்திர எல்லையை கடந்தது காட்டு யானைகள் கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள பள்ளிப்பட்டு, ஈச்சம்பாடி பகுதியில் கரும்பு தோட்டத்திற்குள் நேற்று காட்டு யானைகள் கூட்டம் புகுந்தது.
இதனால் கரும்பு விவசாயிகள் பீதியடைந்தனர். வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரண்டதால் காட்டு யானைகள் கூட்டம் அங்கிருந்து சென்றது.
இன்று அந்த யானை கூட்டம் ஆந்திர மாநிலம், தர்ம ராஜபுரம் அருகே மலைப்பகுதியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலைப்பதியில் யானை கூட்டம் சுற்றித்திரியும் வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக சூழலியல் வல்லூனர்கள் கூறுகையில், "காடுகள் அழிக்கப்படுவதால் யானைகள் மனிதர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன.
இதைத்தடுக்க காடுகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.
கரும்பு தோட்டம், மலைப்பகுதி என சுற்றித்திரியும் காட்டு யானைகள்
No comments