Header Ads

  • சற்று முன்

    தொடரும் நெடுஞ்சாலைத்துறையின் மெத்தனம்; விபத்துகள் நிறைந்த நகரமாகும் ஆவடி

     கிடப்பில் பணி

    ஆவடி அருகே பட்டாபிராமில் ரயில்வே மேம்பால பணிகளை 13 ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது.

     இந்த பாலத்தை அமைக்க 2011ம் ஆண்டில் 33.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

     ஆனால், பணிகளை துவங்காமல் கிடப்பில் போட்டு, மீண்டும் மறுமதிப்பீடு செய்து 2019ம் ஆண்டு 52.11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

     இந்த பணியையும் நெடுஞ்சாலைத்துறை இன்னும் முடிக்கவில்லை. அதனால் ஏற்படும் துன்பங்களை வாகனஓட்டிகள் இன்றும் அனுபவித்து வருகின்றனர். 

     இதுபோல், 53 கோடி ரூபாய் செலவில் துவங்கிய திருமுல்லைவாயல் அண்ணனூர் ரயில்வே மேம்பால பணிகள்  சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன. இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை.

      ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 11.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை 2021ம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைத்துறை துவங்கியது.

     அந்த பணியையும் கூட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர்.

    விபத்தில் சிக்கிய பஸ் இந்த அதிகாரிகளின் மெத்தன போக்கால் ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகரித்துள்ளன. ஆவடி விபத்துகள் அதிகம் நிகழும் நகரமாக மாறும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

     திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம் என மாநகராட்சியின் முக்கிய பகுதிகள் கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.

     ஆனால் ஆவடி தொகுதிக்கு அமைச்சர்கள் மாறினாலும், ஆட்சி மாறினாலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியம் மட்டும் மாறாமல் இருந்து வருகிறது.

     இந்த பிரச்னை ஆவடி தொகுதியில் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் அந்த துறை அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

     பணிகளின் மதிப்பீடு கோடிகளில் இருப்பதால், சம்பந்தப்பட்ட பொறியாளர் கூட நேரடியாக கண்டிக்க முடியாத செல்வாக்கு நிறைந்த நிலையில் ஒப்பந்ததாரர்கள் உள்ளனர்.

     இவர்கள் கமிஷன், கலெக்ஷன் என அமைச்சர்களுடன் நெருக்கமாக உள்ளனர்.

     மேலும், முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களே நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்களாக இருப்பதால், நல்லது செய்ய முயலும் கீழ் நிலை அதிகாரிகளுக்குக் கூட கெட்டதே நடக்கிறது.

     இதனால், ஆண்டுகள் உருண்டோடினாலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 'நமக்கு ஏன் வம்பு' என கண்டும் காணமல் சென்றுவிடுகின்றனர்.

     தற்போது நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலு முதலமைச்சருடன் நேரடி தொடர்பில் இருப்பவர். இதுபோல் ஒவ்வொரு ஆட்சியிலும் இத்துறை அமைச்சர்கள் மட்டும் தலைமைக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.

     இதனால் அந்த துறையைப்பற்றி குறைகள் கூட அமைச்சரின் காதுக்கு செல்லாமல் அதிகாரிகள் பார்த்து கொள்கின்றனர்.

     இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டு கிடப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad