ஓய்வு பெற்ற நீதிபதியின் பேரனை சைக்கிள் திருடிய வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு.!.
ஓய்வு பெற்ற நீதிபதியின் பேரனை சைக்கிள் திருடிய வழக்கில் அபிராமபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
சென்னை ஆர்கே நகர் சாலையில் வசித்து வருபவர் வசந்தகுமார் இவர் கடந்த மாதம் 14ஆம் தேதி அபிராமபுரம் காவல் நிலையத்தில் தனது சைக்கிளை காணவில்லை என புகார் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர் மேலும் இதே போன்று பட்டினப்பாக்கம் மயிலாப்பூர் அபிராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விலை உயர்ந்த சைக்கிள்கள் காணாமல் போவதாக புகார்கள் குவிந்துள்ளது.
இதனையடுத்து அபிராமபுரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். அதன்பிறகு புகார்தாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்தந்த பகுதிக்கு நேரடியாக சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அப்பொழுது 40 வயது தகுந்த நபர் ஒருவர் விலை உயர்ந்த சைக்கிளை திருடும் காட்சி பதிவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக அந்த நபர் செல்லும் வழி முழுவதுமாக சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஆயிரம் விளக்கு பகுதியில் அவர் சைக்கிளை கொண்டு போய் வைப்பது தெரியவந்தது. அதன் பிறகு சிசி டிவி காட்சிகளை தொடர்ந்த போலீசார் குற்றவாளியை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இவர் பெயர் சரவணன் வயது 38 என்பதும் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி பட்டப்படிப்பு முடித்துள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நபரிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தனது தாத்தா ஓய்வு பெற்ற நீதிபதி என்பதும் தனக்கு பெற்றோர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் வயிற்று பிழைப்புக்காக இதுபோன்ற சைக்கிளை முதன்முதலாக திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அபிராமபுரம் குற்ற பிரிவு ஆய்வாளர் ஜெயராம் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments