திருவேற்காடு பூங்காவில் உடற்பயிற்சி செய்த அமைச்சர்
அமைச்சர்கள் பொதுவாக ஆய்வுப்பணியின் போது உடற்பயிற்சி கூடமாக இருந்தால் உடற்பயிற்சி செய்தும், விளையாட்டு திடலாக இருந்தால் வேஷ்டியை மடித்து கட்டி விளையாடியும் ஆய்வு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த வினோத வழக்கம் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இருந்து அதிகளவு அமைச்சர்கள் பின்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திருவேற்காடு நகராட்சியி இன்று காலையில் பூங்காக்களை ஆய்வு செய்தார்.
அப்போது 8வது வார்டில் உள்ள பூங்காவிற்கு சென்ற போது யாரும் எதிர்பாராத நேரத்தில் உடற்பயிற்சி உபகரணத்தின் மீது ஏறி உடற்பயிற்சி செய்தார்.
அவருடன் சென்ற தி.மு.க.வினர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்த ஆய்வின்போது, திருவேற்காடு நகரமன்ற தலைவர் மூர்த்தி, நகராட்சி ஆணையர் ரமேஷ் உட்பட பல்ர் உடனிருந்தனர்.
No comments