Header Ads

  • சற்று முன்

    நகர்ப்புற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்; ஆவடியில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் பணிகள்

    அமைச்சர் நாசர்

     ஆவடியில் முதல் முறையாக நகர்ப்புற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. என அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.

     ஆவடியில் அமைச்சர் சா.மு.நாசர் நகர்ப்புற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை இன்று துவங்கி வைத்தார்.

     இத்திட்டத்தின் கீழ் 1 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, பொறியாளர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     இதுகுறித்து அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 

    “முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும் என்று சொன்னான் வள்ளுவன்.

     அதுபோல் 11 மாதங்களுக்கு முன் தமிகழம் முழுவதும் வலம் வந்த இன்றைய தமிழக முதல்வர் அன்று எதிர்கட்சி தலைவரான இருந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யும் நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார். 

     அதன் அடிப்படையில் இன்று நகர்ப்புற எழை எளிய மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை போல் நகர்ப்புற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

    நாசர்

     ஆவடி மாநகராட்சியில் முதல் முறையாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதற்கட்டமாக 9 பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

     இதன் மூலம் 2400 பயனாளிகள் பயனடைவார்கள். அவர்களுக்கு தினசரி 382 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் இத்திட்டம் இன்று துவங்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad