மாநகராட்சிகளில் நிலைக்குழு அமைக்கும் பணி தீவிரம்
மாநகராட்சிகளில் நிலைக்குழு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மாநகராட்சிகளில் நிலைக்குழுக்கள் அமைக்க மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி, கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி, கரூர், தாம்பரம், கும்பகோணம் ஆகிய மாநகராட்சிகளில் நிலைக்குழுக்கள் அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநகராட்சியிலும் 6 நிலைக்குழுக்களை அமைக்க வேண்டும்.
மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டு உறுப்பினர்களுக்கு ஏற்ப ஒரு நிலைக்குழுவில் 6 முதல் அதிகபட்சமாக 15 பேர் வரை இடம்பெறலாம்.
ஒவ்வொரு நிலைகுழுவிலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதிக்குள் நிலைக்குழுக்களை அமைக்க அனைத்து மாநகராட்சி ஆணையர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments