உக்ரைனில் இருந்து வெளியேறுங்கள்- இந்திய தூதரகம் வலியுறுத்தல்
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் இன்று அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைனில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மனிதாபிமான அடிப்படையில் வெளியேற கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவையை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும்.
உக்ரைனில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வெளியேற போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments