ஆவடியில் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூதன போராட்டம், கண்டுகொள்ளுமா நெடுஞ்சாலைத்துறை?
ஆவடி அருகே அண்ணனூர் ரயில்வே மேம்பால பணிகளை முழுமையாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
ஆவடி அருகே அண்ணனூர் ரயில்வே மேம்பாலம் 53 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பால பணிகள் 80 சதவீதம் முடிக்கப்பட்டு முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படவில்லை. ஆனால் வாகன ஓட்டிகள் அந்த மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இதுவரை மூன்று பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அண்ணனூர் ரயில்வே மேம்பாலத்தை திறக்கக்கோரியும், நெடுஞ்சாலைத்துறையை கண்டித்தும் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டி நூதனமாக போராடியது பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments