பெண்மையின் மகத்துவம் போற்றும் மகளிர் தினம்; பெண் ஆட்டோ ஓட்டுனர்களை கௌரவித்த போலீஸ் கமிஷ்னர்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ம் தேதியான இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆணாதிக்க சமூகத்தில் தங்களது உரிமைகளை வென்றெடுத்ததாக மகளிர் அமைப்பினர் இன்றைய தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஒரு பெண், தாயாக, மனைவியாக, தங்கையாக, அக்காவாக, மகளாக ஆணின் உலகில் நிறைந்திருக்கிறாள்.
இந்த சமூதாயத்தில் தலை நிமிர்ந்த ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையை புறட்டிப்பார்த்தாலும், ஒரு பெண்ணின் தியாகம் மறைந்திருக்கும்.
அதனால்தான், ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருக்கிறாள் என்பார்கள்.
ஆனால் அதற்கு பலனாக ஆணாதிக்க சமூகம் பெண்ணுக்கு கொடுத்தது அடக்குமுறையைத்தான்.
இந்தியாவில் பெண்ணுக்கு நடந்த அடக்குமுறைகள் வேறெங்கும் நடந்திருக்காது.
கணவன் இறந்தவுடன் மனைவியும் சிதையில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் வழக்கம் இந்து மத புராணங்களில் இருந்து பின்பற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
உடன்கட்டை ஏறுதல் என்றும் சதி முறை என்றும் கூறப்படும் இந்த சடங்கு தமிழர் வரலாற்றிலும் உண்டு.
அரசன் இறந்தவுடன், கணவர் மீது கொண்ட அன்பு மிகுதியால் அரசியும் தன்னுயிரை மாயித்ததாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.
இதுவே பிற்காலத்தில் கௌரவமாக பார்க்கப்பட்டு வலுக்கட்டாயமாக பெண்கள், அவர்களது கணவர்களின் சிதைத்தீயில் தள்ளிவிடப்பட்டனர்.
18ம் நூற்றாண்டில் இந்தியாவில் உடன்கட்டை கொடுமை அதிகரித்தது. அப்போது 1891ல் விக்டோரியா மகாராணி இந்தியாவில் உடன்கட்டை ஏறுதலை ஒழிக்க உத்தரவிட்டார்.
சதி, தேவதாசி என பெண்களுக்கு எதிரான பல்வேறு அநீதிகளை கண்டது தமிழ்நாடு. அதிலிருந்து விடுதலை பெற நீண்ட நெடிய போராட்டங்களை வரலாறாக கொண்டதுதான பெண் விடுதலை.
இன்று சமூக மாற்றமடைந்து பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இன்னும் ஒருபடி மேலேபோய், சென்னைக்கு அருகே உள்ள ஆவடி மாநகர போலீசில் பெண் அதிகரிகள் தலைமைப் பொறுப்புகளை இன்று ஒருநாள் ஏற்றுள்ளனர்.
No comments