சென்னையில் ரூ.6,078 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க தமிழக நகராட்சி நிர்வாகத்துறை ஒப்புதல் பெற்றுள்ளது தமிழக அரசு.
சென்னையில் கிழக்கு கடற்கரையில் இருக்கின்ற பேருராட்சியில் 6ஆயிரத்து 78கோடி ரூபாய் மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான ஓப்புதல்படிவத்தை அமல் படுத்தியுள்ளது தமிழக நீர்வளத்துறை.
ஒருநாளிற்கு 40கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த இயந்திரம் ஜப்பான் பன்னாட்டு முறைப்படி கூட்டுறவு முகமை மற்றும் தமிழக அரசின் நிதிக்கி ஏற்றாற்போல் வடிவமைக்க இருப்பதகாவும் அரசு தெரிவித்துள்ளது.
மேலூம் இத்திட்டம் அமலுக்கு வரும் போது தாம்பரம்,பல்லாவரம்,பெருங்களத்தூர்,மாங்காடு வசிக்கும் மக்களுக்கு 20லட்சம் தண்ணீர் நாள்ளொன்றுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இத்திட்டதின்படி திருவாரூர்,மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை,நாமக்கல், ஆகிய பகுதிகளுக்கு 2ஆயிரத்து 327கோடி ரூபாய் செலவில் 6கூட்டு குடிநீர் திட்டகள் நீர்வளத்துறைக்கு நகராட்சி ஒப்புதல் வழங்கியுள்ளது.
No comments