உக்ரைனில் நடந்த பயங்கர சம்பவம் ... 300 பொதுமக்களை ஈவுஇரக்கம் இல்லாமல் கொன்று குவித்த ரஷ்ய ராணுவம்.
உக்ரைனின் Bucha நகரில் ரஷ்யா ராணுவம் நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் பயத்தையையும் அதிர்ச்சியையும் கிளப்பி வருகிறது. இங்கு 300க்கும் அதிகமான பொதுமக்களை ரஷ்ய ராணுவம் கொன்று குவித்ததாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், சுமார் 50 பொதுமக்கள் கட்டி வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக மனதை உருக்கும் மிகமோசமான சம்வவம் உக்ரைன் நாட்டை உலுக்கியுள்ளது.
கொல்லப்பட்ட சில பொதுமக்களின் உடல்கள் மீது கண்ணி வெடிகளோடு கட்டி வைத்துள்ளனர் ரஷ்ய ராணுவ வீரர்கள்.
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் புச்சா என்ற நகரம் அமைந்துள்ளது. சுமார் ஒரு மாத சண்டைக்கு பின்னர் இந்த நகரத்தை உக்ரைன் வீரர்கள் கடந்த வாரம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்பின்னர் வீதி மற்றும் கட்டிடங்களில் பாதுகாப்புக்காக பதுங்கியிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், கொல்லப்பட்டவர்கள் குழிகள் தோண்டப்பட்டு அதில் புதைக்கப்பட்ட்ள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் குற்றம் சாற்றியுள்ளது.
ரஷ்ய ராணுவம் புச்சா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது மனித உரிமை மீறல்களுடனும் அவர்கள் நடந்துள்ளனர்.ரஷ்ய வீரர்கள் துளியும் மனிதாபமின்றி பொதுமக்களின் கைகளை பின்புறமாக கட்டப்பட்டும், நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டும் உயிரிழந்த காட்சிகள் அதிர்ச்சியுடன் மனதை பதபதைக்க வைக்கிறது.
இந்த நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரஷ்ய அரசு ஏற்க மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஐநாவுக்கான ரஷ்ய தூதுவர் வேசிலி நெபன்சியா கூறுகையில், 'ரஷ்யாவுக்கு எதிராக பொய் பிரசாரங்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதகா அவர் தெரிவித்துள்ளார். புச்சா நகரை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது ஒருவர் கூட வன்முறையால் பாதிக்கப்படவில்லை' எனவும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சமர்பித்துள்ள அறிக்கையில், தங்கள் நாட்டிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள், அதற்காக திரட்டப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை போலியானதாகும், ரஷ்யா மீது கெடுஞ்சொல் ஏற்படுத்தும் விதமாக இவை திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments