2 குழந்தைகள் கொன்றுபுதைப்பு.. 4 ஆண்டுக்குப் பிறகு எலும்புக்கூடாக உடல் மீட்பு : வெளிவந்த திகைப்பூட்டும் காரணம்!
தென்காசி மாவட்டம், நொச்சிகுளம் கிராமத்தில் மாடசாமி என்பவர் வசிது வந்தார். இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வாந்தார்கள். இந்த இடைவெளியை உபயோகித்து முத்துமாரி, சசிகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்படுத்தியுள்ளார்.
இவர்களுக்கு இடையே நடந்த பழக்கத்தின் சாட்சியாக ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தையை குழந்தையின் தாயாரான முத்துகுமாரி பிறந்த 5வது நாளிலே குழந்தையை அதே பகுதியில் இருந்த குளத்தில் வீசியெறிந்து கொலை செய்து உள்ளார்.இச்சம்பவத்திற்கு பிறகு இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு தொடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 27ஆம் தேதி சேர்ந்தமலை என்ற பகுதியில் இருந்த முத்துமாரி மற்றும் சசிகுமாரை போலிஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை செய்தபோது மேலும் திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியது என்பது தெரியவந்தது. குழந்தையை குளத்தில் வீசி கொலை செய்ததை அடுத்து அதன் பிறகு பிறந்த மற்றும் ஒரு குழந்தையை கொலை செய்தது விசாரனையின்போது தெரியவந்தது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2018ஆம் ஆண்டு, முத்துமாரிக்கும், சசிகுமாருக்கும் குழந்தை பிறந்த நிலையில் அக்குழந்தையை இருவரும் கொலை செய்து வீட்டின் அருகிலேயே புதைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் சம்பவம் நடந்த இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டிப் பார்த்தபோது, குழந்தையின் எலும்புக்கூடு கிடைத்தது.இதனை போலிசார் விசாரணைக்காக பறிமுதல் செய்தனர்.
சேகரிக்கப்பட்ட சாட்சிகளின் அடிப்படயில் போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த இரண்டு பேரிடமும் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகாத உறவால் இவர்களது வாழ்க்கை வீணாகபோனது இல்லமல் 2 குழந்தைகளையும் இவர்களது காமப்பசிற்காக இரையாக்கிவிடனர். காதல் ஜோடி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதினர்கிடையில் இப்படியும் சிலர். இது போன்ற சம்பவங்களால் யாரை நம்புவது என்ற கேள்வி எளுப்புகிறது.
No comments